கொல்கத்தா, டிச: 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியது. ஐபிஎல் ஏலப் பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக, கிளென் மேக்ஸ்வெலை ரூ10.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து வீரர் இயன் மோர்கன் ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.