விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த மேகா ஆகாஷ்

சினிமா

சந்திரா ஆர்ட்ஸ் & சினி இன்னோவேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி – மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை இசக்கி துரை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் ஊட்டியில் நிறைவு பெற்று இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைப்பெற்றது.

இவர்களுடன் விவேக், மகிழ் திருமேனி, கனிகா, ரகு ஆதித்யா, ரித்விகா, சிவரஞ்சனி உள்ளிட்ட பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான ஒரு பிரச்சனையும் மையமாக பேசப்படவிருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்பிரகாம் எடிட்டிங் செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வீரசமர் கலையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு திருவாருரில் நடைப்பெற்று வருகிறது. முதல் பார்வை விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளிவருகிறது.