கொல்கத்தா, டிச.19:  13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின்னை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. இந்தியாவின் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜேசன் ராய் அடிப்படை விலையான ரூ.1.50 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்சை ரூ.4.4 கோடிக்கு பெங்களூரு அணியும், கிறிஸ் வோக்ஸை அவரின் அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு டெல்லி அணியும் இங்கிலாந்து வீரர் சாம் குர்ரானை ரூ.5.50 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தது.

அதன்படி ஏலத்தின் முதல் பாதியின் முடிவில் 10 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகள் தலா இரு வீரர்களையும், மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை ஆகிய அணிகள் தலா ஒரு வீரரையும் ஏலம் எடுத்துள்ளன.