நடிகை ஷாலு சினிமாத் துறைக்கு வந்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:-
எனது சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், நான் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். முகநூலில் என் புகைப்படங்களை பதிவு செய்து கொண்டே இருப்பேன். அப்போது என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு இந்த கதாபாத்திரத்தில் இந்த பெண் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன் மூலமாக வந்தது தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

போட்டி அதிகம் நிறைந்தது சினிமா துறை. அதிலும் முன்பை விட இப்போது போட்டி அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்த துறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அடிப்படையில் நான் பரதநாட்டியக் கலைஞர். சினிமாவிற்குள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் நாட்டிய கலைஞராக தான் இருந்திருப்பேன். என் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதால் தான் என்னால் இந்த துறையில் வெற்றிகரமாக பயணிக்க முடிகிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ‘ஏ’, ‘பி’, ‘சி’ போன்ற அனைத்து வகையான மக்களும் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியாது ஆனால் அனைத்து வகையினரிடையேயும் இந்நிகழ்ச்சி சென்றடைந்திருக்கிறது. அடுத்த சீசனில் என்னை அழைத்தால் நிச்சயம் பங்கேற்பேன். தற்போது புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் யாஷிகா நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். கடந்த 13-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்றார்.