மும்பை, டிச.24: இலங்கை மற்றும் ஆஸ்திரேலியத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பும்ரா, தவான் சேர்க்கப்பட்டுள்ளது, அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ரோஹித், ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2020-ம் ஆண்டு ஜனவரி 5-9 வரை 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பின்னர், 14 முதல் 19-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

இலங்கை (டி20) தொடருக்கான  இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, ஷிவம் துபே, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்ஸன்.

ஆஸி., (ஒருநாள்) தொடருக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயோஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கீர், ஜஸ்பிரித் பும்ரா.