சென்னை, டிச.25: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று அதிரடியாக 264 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் அதேபோல, 29,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட விலை இன்று 29,584 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.80 ஆக இருக்கிறது. நேற்று 49.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.