திருத்தணி, டிச.31: திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா இன்று காலையில் கோலாகலமாக துவங்கியது.இதில்திரளான பக்தர்கள் பங்கேற்று முருகபெருமானை வணங்கினர்.

அறுபடைவீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்கள் குறிக்கும் வகையில் மலைக்கோயிலுக்கு சென்றுவர 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முதல் படிக்கட்டில் பூஜைகள் நடத்தி திருவிழாவை துவக்குவது வழக்கம் அந்த வகையில் இந்த விழாவை திருத்தணி எம்எல்ஏ பிஎம் நரசிம்மன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் தொடர்ந்து 365 படிக்கட்டுகளிளும் தேங்காயை உடைத்து தீபாரதனை நடத்தினர்.

தொடர்ந்து பக்தர்கள் திருவாசகம் திருப்புகழ் தேவாரம் திருமுறை பாடல்களை பாடிய வண்ணம் மங்கள வாத்தியங்கள் முழங்க இசைக் கருவிகளோடு ஆடிப்பாடி சென்று மலைக்கோயில் உள்ள மூலவர் சுவாமியை தரிசித்து வருகின்றனர்

இன்று இரவு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நடைதிறந்திருக்கும். எப்போதும் இடைவிடாது சுவாமியை தரிசிக்கலாம். இதற்கு உண்டான அனைத்து விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நா பழனி குமார் ஆவின் சேர்மன் வேலஞ்சேரி.த சந்திரன் நகர அதிமுக அவைத் தலைவர் வி குப்புசாமி, நகர துணை செயலாளர் எம் மாசிலாமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.