புதுடெல்லி, ஜன.1: தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லையை தாண்டி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் உரிமை இந்திய ராணுவத்துக்கு உண்டு என்று அவர் கூறினார்.

புதிய தளபதியாக பதவி ஏற்றவுடன் அவர் அளித்த பேட்டியில் கூறிய தாவது:

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை களில் இருந்து விடப்படும் சவால்களை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. எல்லைக்கு அப்பால் பல்வேறு இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவது நமக்கு தெரியும். இந்த மிரட்டல்களை சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ஊடுருவலை தடுத்து தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு இந்திய ராணுவத்துக்கு உரிமை உண்டு என்றார்.

எல்லைகட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் 2019-ம் ஆண்டில் மட்டும் 3200 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது. 2003-ல் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதில் இருந்து கடந்த ஆண்டில் தான் அதிக அளவு அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.