சென்னை, ஜன.1: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் கடற்கரை-தாம்பரம் இரவு 11, 11.30, 11.45, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.