சென்னை, ஜன.2: ஆவடியில் 55 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். துப்புரவு தொழிலாளியான அந்த பெண், கணவனை இழந்த நிலையில், கடந்த 10 வருடங்களாக தனியாக வாழ்ந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு ட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அந்த பெண் அலறவே சத்தம்கேட்டு பயந்து அந்த நபர் தப்பியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், அந்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.