ஸ்ரீரங்கத்தில் பெருமாள் 7-வது நாள் அலங்காரம்

தமிழ்நாடு

திருச்சி, ஜன. 2: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத பெருமாள் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் அஜந்தா கொண்டை சந்திர-சூரிய வில்லை, தலைச்சரம், கலிங்கதுராய், பங்குனி உத்திர பதக்கம், ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், முத்துச்சரம், ரத்தின அபயஹஸ்தம், புஜ கீர்த்தி, அண்டபேரண்ட பக்ஷ்சி திருஆபரணங்களுடன் கண்கொள்ளாக் காட்சி அளித்தார்.

ஏழாம் நாள் உற்சவத்தில் பெருமாளை திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
வரும் 6-ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.