வாஷிங்டன், ஜன.3: ஈரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் படையினரின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சூலேமானியை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.

இரானின் ஆட்சியில் ஜெனரல் காசீம் சூலேமானி, ஒரு முக்கியமான நபர். அவரது படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் தலைவர் ஆயத்துல்லா அலி காமினேவிடம் தொடர்பில் இருக்கும். மேலும் சூலேமானி, அந்நாட்டில் ஹீரோ போல பார்க்கப்பட்டவர்.

சூலேமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் ட்வீட் செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சூலேமானி கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை உறுதிபடுத்தியுள்ளது.