சென்னை, ஜன.6: தங்கத்தின் விலை இன்று ரூ.31 ஆயிரத்தை தாண்டி மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 512 ரூபாய் உயர்ந்து சவரன் விலை 31,168 ஆக உயர்ந்திருக்கிறது.

ஈரான் – அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. .
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதே போல வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.