சென்னை, ஜன.9: ஜப்பானில் இருந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட் சூஷ்க்கியுடன் தர்பார் படத்தின் முதல் காட்சியை சென்னையில் இன்று கண்டுகளித்தார்.

பாபா படம் பார்ப்பதற்காக அவர் முதன்முதலாக சென்னை வந்திருக்கிறார். இதுவரை கிட்டதட்ட பத்து முறை முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னை வந்ததாக அவர் கூறினார்.
சென்னை ரோகிணி தியேட்டரில் தர்பார் படத்தை அவர் பார்த்து ரசித்தார்.

தமிழக அரசியல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் இந்த ஜப்பானிய ரசிகர்.