சசி பற்றிய தர்பார் வசனம்: ஜெயக்குமார் வரவேற்பு

TOP-5 சென்னை

சென்னை, ஜன.9: தர்பார் படத்தில் சசிகலா பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றிருக்கிறார்.

இன்று வெளியான ரஜினியின் தர்பார் படத்தில், சசிகலா பற்றி இரண்டு வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பணம் இருந்தால் சிறையில் இருப்பவர்கள் கூட ஷாப்பிங் செல்லலாம், ஆள் மாறாட்டம் செய்யலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, இந்த வசனம் வரவேற்கத்தக்கது தான் என்று பதிலளித்தார்.