வேலூர், ஜன.13: தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை காட்பாடியில் அதிமுக பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 9-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை காட்பாடி கல்யாண மண்டபம், திருநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் ஆர் கே அப்பு, மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே எஸ் சுபாஷ், காட்பாடி நகரச் செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் வழங்கி துவக்கி வைத்தனர்.