புதுடெல்லி, ஜன.17: 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நாளில், மத்திய அரசை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய வங்கிகள் அமைப்புடன், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு சம்பள உயர்வு குறித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.