ஹோபர்ட், ஜன.18: ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

குழந்தைபேறுக்கு பின்னர் களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே பட்டம் வென்றுள்ள சானியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் ஜோடி, செக்குடியரசின் மேரி பைஸ்கோவா-ஸ்லோவேனியாவின் டமாரா ஜிடன்செக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் சீனாவின் ஜங்-பெங் ஜோடியை, சானியா-நாடியா ஜோடி எதிர்கொண்டது. ஆட்ட முடிவில், இந்தியாவின் சானியா-உக்ரைனின் நாடியா ஜோடி, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜங்-பெங் ஜோடியை வீழ்த்தி சாம்பியனானது.

குழந்தை பேறுக்கு பின்னர் 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்த சானியா மிர்சா, தான் களம் கண்ட முதல் சர்வதேச போட்டியிலேயே சாம்பியனாகி அசத்தியுள்ளார்.