ரஜினி-168 படத்திலும் எஸ்.பி.பி தான் ஓபனிங் சாங்

சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் புதிய படம் ‘தலைவர் 168’.
இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

ரஜினி படங்கள் என்றாலே ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடுவது வழக்கம், பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் முதல் பாடலை எஸ்.பி.பி பாட உள்ளார். இந்த பாடலை முன்னணி பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் ரஜினி 168 படத்தின் ஓபனிங் பாடலை மிக அருமையாக எஸ்.பி.பியின் குரலில் மாஸாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த பாடல் ரஜினிக்கு மிகபும் பிடித்துள்ளது என்றும் அவர் அதனை ரசித்து கேட்டார்” என்றும் கூறியுள்ளார்.