திருச்சி, ஜன. 18: திருச்சி அருகே 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஸ்ரீ சாய் கற்பக விருட்சம் டிரஸ்ட் அறங்காவலர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அக்கரைப் பட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அங்கு உள்ள ஞான பூமி குருஸ்தானத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பக்தர்களின் நன்கொடைகள் மூலம் படிப்படியாக
ரூ.30 கோடியில் தற்போது தென் சீரடி பாபா சாய்பாபா கோவில் தயாராகியுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை 22.10.2015-ல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 12.2.2016 முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் புதிய கட்டிடத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் தியான மண்டபம், முத2ல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு பாபாவின் சமாதி மந்திர், விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தத்தாத்ரேயர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

என்டிசி குழுமத்தின் தலைவர் கே.சந்திரமோகனை நிர்வாக அறங் காவலராகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள அறங்காவலர்கள் குழு வினர் மற்றும் பக்தர்கள் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளை மேற் கொண்டுள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மட்டு மல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளார்கள்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், குளியலறை, . யாகசாலை பூஜைகள் வரும் 17ஆம் தேதி தொடங்கியது. இந்தப் புதிய ஆலயத்தில் ராஜஸ்தானில் தயார் செய்யப் பட்ட ஸ்ரீ சாய்பாபா திரு வுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது,
இவ்வாறு அவர்கூறினார்.