சென்னை, ஜன.18: எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி கடந்த 17-ந் தேதி திருவல்லிக்கேணி பகுதி 116.வது வட்டத்தில் அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி பகுதி செயலாளர் எஸ்.லட்சுமிநரசிம்மன் தலைமையில்  தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்எல்ஏ பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை தெற்கு வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.டி.தேவேந்திரன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எம்ஜிஆர் எஸ்.வாசன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் எம்.கே.சிவா, ஜே.பி.புகழேந்தி, எஸ்.ஜனார்த்தனன், டி.ஆனந்தன், எஸ்.சரத்குமார், எம்.மதன், எம்.எஸ்.வி. சதிஷ்குமார், மின்னடி டி.எத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.