புதுடெல்லி, ஜன.20:

சந்திராயன் 2 திட்டம் தோல்வியால் நானும் கவலை அடைந்தேன். ஆனால், பின்னர் விஞ்ஞானிகளுடன் சென்று பேசி, அவர்களை ஊக்கப்படுத்தினேன். தோல்விகளில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கண்டறியவேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

பிரதமர் மோடி டெல்லியில் இன்று நாடு தழுவிய அளவில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கல்வி நிறுவனங்களில் இதனை மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது பேச்சின் போது மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில், கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இளம் வயதினர் எனக்கு கொடுக்கிறார்கள் .

ஹேக்கத்தான் போன்ற போட்டிகளில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதில், இளைஞர்களின் உண்மையான திறமை தெரியவரும்.

உங்களுடைய இதயத்தை தொட்ட நிகழ்ச்சி எதுவென்று யாரேனும் கேட்டால் இந்த நிகழ்ச்சியை சொல்வேன். மாணவர்கள் இளம் வயதில் நிறைய கற்று கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களை அவர்களுக்கு பெற்றோர் போதிக்க வேண்டும் என்றார் மோடி.நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.