மெல்போர், ஜன.21:  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் பிரஜ்னேஷ் குனேஸ்வரன் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில், இந்திய தரப்பில் சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் தாட்சுமா இட்டோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், பிரஜ்னேஷ் 4-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து முதல்சுற்றுடன் நடையை கட்டினார்.

முன்னதாக, நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டிகளில் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் டெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிட்ச், முன்னணி வீராங்கனைகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலின் வோஸ்னியாக்கி , பெட்ரா கிவிட்டோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.