நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் யாமீ கவுதம் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகர் பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரசன்னாவிற்கும் கதை பிடித்துவிட்டதால் வலிமை படத்தில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.