ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்தப் படம் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.