விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஆக்ஷன் கமர்ஷியல் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஷார்மி கவுர் நடிக்கிறார். இந்த படத்தை பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக இது அமையும்.

படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஸ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.