திருவாரூர், ஜன. 21:

ஹைட்ரோ கார்பன் குறித்த மத்திய அரசின் அவசர சட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழகத்திற்கு விரோதமாக விவசாயிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு சட்டங்களை கொண்டுவருகிறது .

குறிப்பாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்வதற்கு இனி விவசாயிகளிடம் கருத்தை கேட்க வேண்டியதில்லை பொது மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என்கிற ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு பிரப்பித்திருக்கிறது .இது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மத்திய அரசு குழிதோண்டி புதைக்கிறது .

.தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக விரைந்து வழக்கு தொடர இருக்கிறது .மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டம் குறித்து உடனடியாக தமிழக அரசு தனது கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்கவேண்டும் இவ்வாறுஅவர் கூறினார்.