சிதம்பரம், ஜன 21 :
சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள 2பிரபல சினிமா தியேட்டர்களில் தரமற்ற வகையில் உணவு பொருட்கள், குடிநீர் விற்பனை செய்வதை கண்டுபிடித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிரபல 2 சினிமா தியேட்டர்களில் சினிமா பார்க்க வரும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பாப்கான் உள்பட பல உணவு பொருட்கள் மிகப் பழைய நிலையில் தயார் செய்வதை, விற்பனை செய்வதாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் சென்றது. அதன்பேரில் சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன், உணவு பாதுகாப்பு அதிகாரி மாரிமுத்து ஆகியோர் 2சினிமா தியேட்டர்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சினிமா தியேட்டரில் உள்ள கேண்டீன் உள்ள உணவு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அங்கு இருந்த பாப்கானை சோதனை செய்தனர். காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து அதிகாரிகள் அவற்றை தணணீர் ஊற்றி அழித்தனர் இதுபோன்று புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்..