கொரோனா வைரஸ்: இந்தியாவில் முன்னெச்சரிக்கை

இந்தியா

புதுடெல்லி, ஜன.21:

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது
.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவி வருவதால் இது அபாயகரமான தொற்று நோய் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலால் 4 பேர் இறந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிசிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்களும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை சீன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 45 வயது இந்திய ஆசிரியை ஒருவரும் சீனாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.