கோடீஸ்வரி கவுசல்யா கார்த்திகாவிற்கு முதல்வர் வாழ்த்து

சென்னை

சென்னை, ஜன.23: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ.1 கோடியை வென்று மாற்றுதிறனாளி பெண்ணான கவுசல்யா கார்த்திகா, தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சியில் மாற்று திறனாளி ஒருவர் வெற்றிபெறுவது இதுதான் முதல்முறையாகும்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கவுசல்யா கார்த்திகாவை, அவரது வரலாற்று வெற்றிக்காக அவர் மனமுவந்து பாராட்டினார். முதல்வருடனான சந்திப்பில் கவுசல்யா கார்த்திகாவின் பெற்றோர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமார், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த் தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.