சென்னை, ஜன.23:

திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுத் தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: அதிமுகவில் உள்ள அனைவரும் முதலமைச்சர்கள் தான் என்ற எடப்பாடி பேசினார். அப்படி என்றால் ஓபிஎஸ்-ஐ முதலமைச்சராக பதவில் அமர வைக்க முடியுமா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளாரே?

பதில்: அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட கொடி கட்டிய காரில் வர முடியும், நாங்கள் எல்லாம் மிட்டா மிராசு கிடையாது. முதலமைச்சர் சொன்ன வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக அவரே உள்ளார். அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும் ஆனால், திமுவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா. கடைக்கோடி தொண்டனும் தலைமைக்கு வரலாம் என்பது திமுகவில் சாத்தியமில்லை. தந்தைக்கு பின் மகன், உதயநிதிக்கு பேரன் வந்தால் அவருக்கு என வாரிசு என தொடரும்.

கே: உள்ளாட்சி தேர்தல் என்பது இடைவேளை, சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே ?
ப: அதிமுகதான் ஹீரோ, 2021 கிளைமாக்சில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

கே : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 17% நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் குறைந்துள்ளனரே?
ப : நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, நீட் தேர்வினை தேர்வுத்துறை கொண்டு வருகிறது. தடுக்க நாங்களும் போராடுகிறோம் ஆனால் முடியவில்லை இதனால் அடுத்த ஆண்டு முதல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். அதேபோல, டி என் பி எஸ் சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கே : 28ம் தேதி திமுக போராட்டம் அறிவித்துள்ளது ?

ப : ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்ததே திமுகதான், திருடிவிட்டு திருடர்களே திருடன் திருடன் என்று ஒடுவது உள்ளது இந்த போராட்டம்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறினார்.