புது டெல்லி, ஜன.23:

நிர்பயாவின் 4 குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து பாதுகாப்புக்காக தினமும் சுமார் ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது.

திஹாரில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயாவின் 4 குற்றவாளிகளை தூக்கிலிட கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை தூக்கிலிட முன்னேற்பாடு வேலைகளும் நடைபெறுகின்றன. மேலும் காவலர்கள் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு குற்றவாளிகள் மீது 24 மணி நேரமும் கண்களை வைத்துள்ளனர்.

இந்த 4 பேரும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 32 பாதுகாப்பு காவலர்கள், 24 மணி நேரத்தில் 48 ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். இதனால் நிர்வாகத்திற்கு தினமும் சுமார் 50 ஆயிரம் வரை செலவாகிறது.