சென்னை, ஜன.23:

அயனாவரத்தில் மளிகை கடைக்காரரை கத்தியால் வெட்டி செல்போன் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து சென்ற மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

அயனாவரம் உஜ்ஜினி தெருவை சேர்ந்தவர் விஜய்சேகர் (வயது 50), கோயம்பேட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் கடைக்கு செல்வதற்க்காக நூர் ஹோட்டல் அருகே பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் விஜய்சேகரிடம் இருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர்.

அவர் தரமறுக்கவே கத்தியால் இடது பக்க கண்ணம் மற்றும் வலது கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டிவிட்டு செல்போன், பணம் மற்றும் மளிகைக்கடை சாவி ஆகியவற்றை அந்த நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயசேகரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து விஜய்சேகர் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்மகும்பலை தேடிவருகின்றனர்.