2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.

நாயின்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் நடத்தும், சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’, தென்னிந்திய இசை சுற்றுப்பயணம் நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி துவங்குகிறது. அதனை தொடர்ந்து 23-ம் தேதி கொச்சினிலும், மார்ச் 7-ம் தேதி மதுரையிலும், 13-ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.