தாம்பரம், ஜன. 23: குரோம்பேட்டை யில்உள்ள கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த 3பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரிக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் தகவலின் பேரில் இணை ஆணையர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது கல்லூரி அருகே கஞ்சா விற்பனை தெரியவந்தது.. அதனடிப்படையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஹர்ஷத் ஆலம்(வயது19), முகமது உசேன்(வயது 26), ஷாஜித் (வயது19) ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமது உசேன் தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஹர்ஷத் ஆலமிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதில் ஹர்சத் ஆலம் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூவரையும் சிட்லப்பாக்கம் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.