கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சுந்தர் சி, கோவை சரளா, மனோபாலா, வினய் ஆகியோர் நடித்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டு அரண்மனை 2 படத்தை சுந்தர் சி இயக்கினார். இதிலும் ஹன்சிகா காதாநாயகியாக நடித்தார். மேலும் திர்ஷா, பூனம் பஜ்வா, சித்தார்த், சூரி, சுந்தர் சி, கோவை சரளா, மனோபாலா, சுப்பு பஞ்சு ஆகியோர் நடித்தனர், இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரண்மனை 3 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
இதில் ஹன்சிகா கேரக்டரில் ராக்ஷி கண்ணா நடிக்க உள்ளார். சித்தார் ரோலில் ஆர்யா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.