சென்னை, ஜன.23:  வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதையடுத்து வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2020 முதல் 31.3.2020 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9592.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்