மும்பை, ஜன.24:  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் (தெற்கு மண்டலம்), உறுப்பினர் ககன் கோடா (மத்திய மண்டலம்) ஆகியோரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் எல்.சிவராமகிருஷ்ணன் (தமிழ்நாடு), ராஜேஷ் சவுகான் (சத்தீஷ்கார்), இடக்கை பேட்ஸ்மேன் அமய் குரேசியா (மத்தியபிரதேசம்) ஆகியோர் இந்திய அணியின் தேர்வு குழு பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 54 வயதான எல்.சிவராமகிருஷ்ணன் 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியதுடன், தற்போது வர்ணனையாளராகவும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.