நான்ஜிங், ஜன.24:  சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் எதிரொலியாக, அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதிவரை தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், சீனாவில் வூகான் பகுதியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு நடைபெறவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பெண்கள் கால்பந்து போட்டிகள் நான்ஜிங் என்கிற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், அங்கு நடைபெற இருந்த குத்துச் சண்டை போட்டியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான, உத்தரவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.