ஆக்லாந்து, ஜன.24:  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த கடின இலக்கை (203), அடித்து துவம்சம் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று மதியம் 12.20 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.
தொடக்கவீரர் கோலின் முன்றோ (59), கேப்டன் கேன் வில்லியம்ஸன் (51), ராஸ் டெய்லர் (54) ஆகியோரின் அபார அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை அசால்ட்டாக விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், இளம்வீரர்கள் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி அரைசதம் மற்றும் கேப்டன் கோலியின் அசத்தல் ஆட்டத்தால் 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் விட்டுகொடுத்து 204 ரன்களை அடித்து நொறுக்கி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.