புதுடெல்லி, ஜன.31: 2020-2021-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார அறிக்கையில், பொருளாதாரம், டிஜிட்டல் மயமாகி வருவதாலும், வங்கி கணக்குகளும், பிறதுறைகளும், டிஜிட்டல் மயமாகி இருப்பதால் ஒதுக்கப்படும் நிதி நேரடியாகவே உரியவர்களுக்கு நேரடியாகவே சென்று சேர்கிறது. இதனால் கடந்த ஆண்டில் 1.70 லட்சம் கோடி அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், டிஜிட்டல் மயமாகும் என்றும் 5 டிர்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருப்பதாகவும் ஜிடிபி 5 சதவீதமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.