அருண்விஜய்யின் ‘சினம்’ ஷூட்டிங் விறு விறு

சினிமா

சமீபகாலமாக நல்ல கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து அருண்விஜய் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாஃபியா’ படம் பிப்ரவரி 21 -ம் தேதி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக அவர் நடிக்கும் ‘சினம்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது:-
‘சினம்’ திரைப்படம் திரில்லர் ஆக்ஷன் விரும்பிகளுக்கு பெரு விருந்தாக இருக்கும். அதே நேரம் உணர்வுப்பூர்வமாக கவரும்படி இருக்கும். கதை சொல்லும் விதத்திலும் கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் இயக்குநர் குமரவேலன் வித்தகராக இருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் அவரது தொலைநோக்கு தன்மை பெரும் சிக்கல்களையும் எளிதாக தீர்த்துவிடுகிறது. மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். டீசர், இசை வெளியீடு, திரை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.