தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

2020-ம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார். இந்த படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம்.