சென்னை, பிப்,4: மத்திய பட்ஜெட் மிகச்சிறந்த பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துள்ள நிலையில் அவர்களை தவறாக வழிநடத்த முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி கூறி உள்ளார். டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பிஜேபி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சனிக்கிழமை நிதி அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மிகச்சிறந்தது என மக்கள் உணர்ந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார சூழலில் இதைவிட நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அப்படி இருந்தும் மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இதை முறியடிப்பதற்காக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை நாம் எடுத்து கூற வேண்டும் என்றார். மேலும் அசாமில் போடோ இயக்கத்தினருடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற முயற்சி நடைபெற்றது இல்லை. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி ஏற்படும். வன்முறை ஓய்ந்து விடும் என்றார். இந்த கூட்டத்தில் பிஜேபி தலைவர் ஜேபி. நட்டாவும் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் காலையில் மக்களவை கூடிய போது பிஜேபி உறுப்பினர் அனந்த் ஹெக்டே மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில்¢பேசியதை கண்டித்து காங்கிரஸ், திமுக, என்சிபி உறுப்பினர்கள் குரலெழுப்பினார்கள். அது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ஓம் பிரிலா அனுமதி மறுத்தார். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.