சென்னை, பிப்.6:  நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் முகாந்திரம் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சேப்பாக்கத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, விஜய்யின் வீடுகளில் நடத்தப்படும் சோதனை உள்நோக்கம் கொண்டது என்று அவரது ரசிகர்கள் கூறி வருவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ஜனநாயக அமைப்பில் யாரையும் பழிவாங்க முடியாது. வருமான வரித்துறை சுதந்திரமான அமைப்பு. தங்களிடம் உள்ள முகாந்திரம் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தங்கள் கடமையை அவர்கள் செய்து வருகிறார்கள் என்றார். மேலும் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆதாரமின்றி வதந்திகளை பரப்பக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.