சிம்புக்கு வில்லனான எஸ்ஜே சூர்யா

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால். இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.