கொரோனா பாதிப்பு: மருந்து கொடுக்கும் ரோபோக்கள்

TOP-6 உலகம்

பெய்ஜிங், பிப்.10: சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் பணியில் சில மருத்துவமனைகள் ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றன.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 811 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900 ஐ தாண்டியது.