கடலை வியாபாரிக்கு லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு

இந்தியா

திருவனந்தபுரம், பிப்.10: கேரளா மாநிலத்தில் 12 வருடமாக லாட்டரி சீட்டு வாஙகி வந்த கடலை வியாபாரிக்கு அரசு லாட்டரியில் ரூ. 60 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் சமீர். இவருக்கு சரீபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

சமீர் அந்த பகுதியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு அருகே ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் தனது கடையில் கேரள அரசு லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் இருந்து சமீர் லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். கடந்த 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்தாலும் அவருக்கு இதுவரை பரிசு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கேரள அரசு லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியாக சமீர் தற்போது மாறி உள்ளார்.