எஸ்சி எஸ்டி திருத்தம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்

TOP-5 இந்தியா

புதுடெல்லி, பிப்.10: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2018 மார்ச் 20ம் தேதி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. மேலும் இதில் அரசு ஊழியர்கள் எளிதாக ஜாமீன், முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.

இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கும் எளிதாக ஜாமீன் கிடைக்கும், முன் ஜாமீனும் கிடைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தலித் மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தின் பேரில் இந்த சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தலித் மக்களால் வரவேற்கப்பட்டது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த வருடம் முழுக்க விசாரணை நடந்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அருண் மிஸ்ரா, வினித் சரண், மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று கூறியுள்ளது.