தமிழக மக்களை திருப்திபடுத்த முடியாது: ஜீவா

சினிமா

டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை எம்.வி கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில், மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன், நாயகி ஹீனா ஸஹா, இசை அமைப்பாளர் ஆனந்த், இயக்குநர் எம்.வி கிருஷ்ணா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் ஜீவா பேசுகையில், ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள்.

அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்றார்.